கோவை: தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பயணிகள் !

X

அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்த முயன்ற போது, சாலையின் மீது சென்று கொண்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து.
கோவை, ஒண்டிப்புதூர்- வடவள்ளி வழித்தடத்தில் ஆர்.எம்.எஸ். என்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு 7.55 மணியளவில் லாலி சாலையில் இருந்து வேளாண்மைக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த அந்த பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்த முயன்ற போது, சாலையின் மீது சென்று கொண்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தனியார் பேருந்து ஓட்டுநரை கண்டித்தனர், ஆனால் அவர் பேருந்தை மேலும் வேகமாக இயக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுநரை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக லாலி சாலையில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறைக்கு தகவல் அளித்தும் அவர்கள் வர தாமதமானதால், பொதுமக்கள் மாற்று பேருந்தில் கிளம்பிச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதாகவும், பயணிகளுக்கு பாதுகாப்பில்லாமல் உயிர் பயத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story