சூலூர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

X

கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது தொடர்பாக வருண் மற்றும் ஹரிபிரசாத் ஆகிய இருவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் (26), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25) மற்றும் சசிகுமார் (26) ஆகிய மூன்று நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நேற்று மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
Next Story