கோவை: நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் போராட்டம் !

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர், கோவையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 - ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர், கோவையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 - ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும், அரசாணை 140 - ஐ ரத்து செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலை 210 சுங்கச் சாவடி அமைத்து கார்ப்பரேட் கம்பெனி சுங்க வரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்கக் கூடாது, ஐந்தாயிரம் நிரந்தர பணி இடங்களை ஒழிக்கக் கூடாது, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பறிக்கக் கூடாது, மக்கள் சேவைத் துறையாக நெடுஞ்சாலைத் துறையை காத்திட வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு பணி பெற்றிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.போராட்டத்தின் முடிவில், அரசாணை 140 - ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story