கோவை: தவறவிட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு !

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் மீட்க பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 304 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.
Next Story