கோவை: பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்களின் போராட்டம்

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய வசதிகள் இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய வசதிகள் இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, விடுதியின் சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என்றும், மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய ஆராய்ச்சி கருவிகள் மோசமான நிலையில் பராமரிக்கப்படாமல் செயல்படாத நிலையில் உள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக, சுருக்க அறிக்கை மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் எனக் கூறி, பல்கலைக்கழகத்தின் முதன்மை வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் பல்கலைக்கழக வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story