சூலூர்: கட்டிடத்தின் மேலிருந்து குதிப்பதாக மிரட்டிய வாலிபர் !

சூலூர்: கட்டிடத்தின் மேலிருந்து குதிப்பதாக மிரட்டிய வாலிபர்  !
X
கட்டிடத்தின் மேல் தளத்தில் நின்றுகொண்டு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.
சூலூரை அடுத்த நீலாம்பூர் - அவிநாசி சாலையில் நேற்று ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் நின்றுகொண்டு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இந்த தகவலை அறிந்த சூலூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், வாலிபர் போலீசாரை தாக்க முயன்றதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சாதுர்யமாக பேசி வாலிபரை சமாதானப்படுத்தினர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார். விசாரணையில், வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் வெள்ளானைப்பட்டியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் தயானந்த சக்கரவர்த்தி என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வாலிபரை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story