கோவை, தொண்டாமுத்தூர் அருகே ரோலக்ஸ் யானை அட்டகாசம் – மூன்றாவது கும்கி யானை வரவழைப்பு

X

ரோலக்ஸ் யானையை கட்டுப்படுத்த கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைப்பு.
தொண்டாமுத்தூர், நரசிபுரம் பகுதிகளில் விவசாய நிலங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் "ரோலக்ஸ்" என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே டாப்ஸ்லிப் முகாமில் இருந்து கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகியவை கோவைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது "கபில்தேவ்" எனும் மேலும் ஒரு கும்கி யானையும் லாரி மூலம் தாளியூர் வந்துள்ளது. மூன்று கும்கி யானைகளும் வனத்துறையினருடன் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரோலக்ஸ் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் வார இறுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது.
Next Story