கோவை: மூதாட்டியிடம் இருந்து செயின் பறிப்பு – சி.சி.டி.வி காட்சி வெளியீடு

X

பேருந்தில் மூதாட்டியிடம் செயின் திருட்டு – நதியா கைது, சி.சி.டி.வி காட்சி வைரல்.
கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (73) என்பவரிடம், பேருந்தில் பயணித்த நதியா (38) எனும் பெண் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூரில் மகளை பார்த்துவிட்டு கோவை திரும்பிய லட்சுமியிடம், செயின் கொக்கி கழன்றுவிட்டதாக கூறி, செயினை கழட்டி பையில் வைத்துக்கொண்டு பின்னர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ள நதியாவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தச் சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story