கோவை அருகே பழைய நீர்த்தேக்க தொட்டி இடிப்பு – வீடியோ வைரல் !

சிதிலமடைந்த 35 ஆண்டு பழைய நீர்த்தேக்க தொட்டி இடிப்பு – முன்னெச்சரிக்கையுடன் அகற்றம், வீடியோ வைரல்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த காளம்பாளையம் ஊராட்சியின் விஜயநகரம் பகுதியில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இடிந்து விழும் அபாயம் காரணமாக, அதிகாரிகள் முன்னிலையில் நேற்று தொட்டி இடித்து அகற்றப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. சுத்தியலால் பில்லர் அடிக்கப்பட்டவுடன், தொட்டி நொடிகளில் சரிந்து விழுந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குப் பதிலாக, எம்.பி. ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் செலவில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
Next Story