கோவை அரசு மருத்துவமனை சக்கர நாற்காலி விவகாரம் : குற்றச்சாட்டுகள் பொய்யென நிர்வாகம் அறிக்கை

கோவை அரசு மருத்துவமனை சக்கர நாற்காலி விவகாரம் : குற்றச்சாட்டுகள் பொய்யென நிர்வாகம் அறிக்கை
X
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்காமல் 100 ரூபாய் லஞ்சம் கேட்டனர் என்ற குற்றச்சாட்டு பொய் என மருத்துவமனை விளக்கம்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்காமல் 100 ரூபாய் லஞ்சம் கேட்டனர் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், 85 வயது நோயாளி வடிவேல் வாக்கர் உதவியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்ததும், சக்கர நாற்காலி தாமதமாக வந்ததால் உறவினர் வாக்குவாதம் செய்து, பின்னர் ஆட்டோ ஓட்டுநரை அழைத்து நோயாளியை பலவந்தமாக இழுத்துச் சென்றது தெரியவந்தது. அதே சமயம் வீடியோ பதிவு செய்து, மருத்துவமனை மீது குற்றச்சாட்டு சுமத்த முயற்சி செய்யப்பட்டதாகவும், லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் பணியில் அலட்சியம் காட்டிய தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் இருவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் போதுமான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன என்றும், நோயாளி சேவையில் குறைபாடு ஏற்படாத வகையில் பணியாளர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Next Story