கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பதவி உயர்வு முறையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ஆசிரியர் பணி, ஆராய்ச்சி பணி, வேளாண் விரிவாக்க பணி, பல்கலைக்கழக வளர்ச்சி பணி ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆராய்ச்சி கட்டுரைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் இதனால் 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து அமர்ந்து போராட்டம் நடத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற உயர் மட்ட குழு நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
Next Story