கோவை: கூடுதல் கட்டணம் - பேருந்துக்கு 1000 அபராதம்!

கோவை: கூடுதல் கட்டணம் - பேருந்துக்கு 1000 அபராதம்!
X
கோவையில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில் தனியார் பேருந்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.
கோவை மாநகரில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வழக்கறிஞர் சண்முகநாதன் என்பவர் காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு 6 ரூபாய் டிக்கெட் எடுக்க, நடத்துனர் 10 ரூபாய் வசூலித்துள்ளார். இதற்கு முறையான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த சண்முகநாதன், தனியாளாக அந்தப் பேருந்தை ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதியான நிலையில், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story