கோவை: ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் - 11.64 லட்சம் பறிமுதல் !

X

கோவையில் 3 நம்பர் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறை, 11.64 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு சூதாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், கோவையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடவள்ளி பகுதியில் நேற்று கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், கருப்பராயன் கோயில் அருகே சந்தேகப்படும்படி இருந்த பசுபதி என்பவரை விசாரித்தனர். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் என்றும், 3 நம்பர் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 11.64 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பசுபதி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story