கோவை அருகே ரூ.1.25 கோடி தங்கம் கொள்ளை – மேலும் 2 பேர் கைது !

X

கோவை அருகே ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.
கோவை அருகே ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் நகை வியாபாரி ஜெயிசன் ஜேக்கப்பிடம் இருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி எட்டிமடை அருகே தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து இதுவரை ஆறு பேரை கைது செய்திருந்தனர். சமீபத்தில் வாளையார் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் சிக்கிய பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தைச் சேர்ந்த ரோஷன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
Next Story