கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.1.75 லட்சம் பறிமுதல் !

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.1.75 லட்சம் பறிமுதல் !
X
சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல் – ஊழியர்களிடம் தீவிர விசாரணை.
கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இடைதரகர்கள் அவசரமாக வெளியேறிய நிலையில், அதிகாரிகள் சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ரூ.1.75 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பணம் எப்படிப் பெற்றது, யார் வைத்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களிலும் இதே அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் நடந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story