சூலூரில் தெருநாய் தாக்குதல்: 2 கன்று குட்டிகள் பலி !

கன்றுகளை கொன்ற தெருநாய்கள் – ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
கோவை, சூலூர் அருகே காடாம்பாடி ஊராட்சி, பாப்பாங்காடு பகுதியில் தெரு நாய்கள் தாக்கி 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன. விவசாயி விஸ்வநாதன் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுகளை நாய் கூட்டம் கடித்து குதறியது. கன்றுகளின் அலறல் கேட்டு விரைந்த விவசாயிகள் மீது கூட நாய்கள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை, 2 கன்றுகள் இறந்தும், மற்றொரு கன்று காயமடைந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள லே-அவுட்டில் உணவக, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் பெருகி, அடிக்கடி கால்நடைகளை தாக்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெருநாய் பிரச்சினையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story