சூரியன் அஸ்தமனத்தை நோக்கி: திரளான பக்தர்கள் 'அர்க்யம்' படைத்து வழிபாடு.
கோவை பண்ணிமடை கிராமத்தில் உள்ள கீதா கிருஷி கேந்திராவில், ஆதர்ஷ் உ.பி. சமாஜ் சார்பில் சட் மகாபர்வத்தின் முக்கிய நிகழ்வான 'சாயங்கால அர்க்யம்' வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டு சட் பூஜை தினத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ந்த அரிய ஆன்மிகச் சங்கமம் குறிப்பிடத்தக்கது. மாலையில் அஸ்தமனமாகும் சூரியக் கடவுளுக்கும், சட்டி மாயா (சஷ்டி தேவி)வுக்கும் நீர் மற்றும் பிரசாதங்கள் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். விரதம் இருந்த பெண்கள், குடும்பத்தின் மகிழ்ச்சி, செழிப்பு, மற்றும் குழந்தைகளின் நீண்ட ஆயுளுக்காகக் கோரி, நாள் முழுவதும் நீர் அருந்தாமல் நிரஜலா விரதம் (தண்ணீர் கூட அருந்தாத விரதம்) மேற்கொண்டனர். பக்திப் பாடல்கள் முழங்க, திரளான பக்தர்கள் ஒன்றுகூடி சட் பூஜை சடங்குகளை நிறைவேற்றினர்.
Next Story